Wed. Jan 14th, 2026


ஆசியா விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழகப் பெருமையை நிலைநாட்டினர்!

கேரியில் நடைபெற்ற ஆசியா விழா (Asia Festival) நிகழ்ச்சியின் 10வது ஆண்டில், ‘தமிழ் பசங்க’ டிராகன் படகு (Dragon Boat) குழு பங்கேற்று, முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தமிழ் பசங்க’ குழு, வெறும் இரண்டு ஆண்டுகளில் இந்த அற்புதமான சாதனையை நிகழ்த்தி, தமிழர் சமூகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.

இந்த வெற்றிக்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விளையாட்டுக்கு தமிழர்கள் வழங்கும் முக்கியத்துவமே இதுபோன்ற சர்வதேச வெற்றிகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது என பாராட்டுகள் குவிகின்றன.

“இந்த வெற்றியால் இன்னும் பல இளம் தமிழர்கள் கடல் விளையாட்டுகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஊக்கம் பெறுவார்கள்,” என குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.



‘தமிழ் பசங்க’ குழுவின் இந்த வெற்றி, இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மட்டுமல்லாமல், இனி கடல் விளையாட்டுகளில் தமிழகம் முன்னிலை வகிக்கும் காலம் தொடங்கிவிட்டது என்பதற்கும் உறுதியளிக்கிறது.

செய்தி: விக்னேஸ்வரன்

 

By TN NEWS