Thu. Nov 20th, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் உரையாற்றினார் — தமிழகத்தின் 12,480 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

செங்கல்பட்டு மாவட்டம், அக்டோபர் 11:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 12,480 ஊராட்சி கிராமங்களில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம சபை கூட்டங்கள் 11.10.2025 சனிக்கிழமை அன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி மூலம் ஊராட்சி மன்ற தலைவர்களை நேரடியாக தொடர்புகொண்டு உரையாற்றினார்.

முதல்வர் தனது உரையில்;

“கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு. ஒவ்வொரு ஊராட்சியிலும் அடிப்படை வசதிகள் — சாலை, பேருந்து, குடிநீர், மழைநீர் வடிகால் போன்றவற்றை மேம்படுத்துவது முக்கியம். வடகிழக்கு பருவமழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும்,”
எனவும்,
“கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, டெங்கு தடுப்பு, மகளிர் சுய உதவி குழுக்கள் வளர்ச்சி மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கான ‘விடியல் பயணத் திட்டம்’ ஆகியவை மக்களுக்கு பெரும் பலனளிக்கின்றன,”
எனவும் குறிப்பிட்டார்.

இந்த காணொளிக் காட்சி நிகழ்வில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி (இ.ஆ.ப) மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநர் பி. பொன்னையா (இ.ஆ.ப) ஆகியோரும் இணைந்து கலந்து கொண்டனர்.

பொழிச்சலூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் — MLA கருணாநிதி தலைமையில்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புனித தோமையார் மலை ஒன்றியம், பொழிச்சலூர் ஊராட்சி பகுதியில் காலை 11.00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பல்லாவரம் MLA இ. கருணாநிதி அவர்கள் தலைமை தாங்கி கலந்து கொண்டார். ஊராட்சி மன்ற தலைவர் பா. வனஜா தயாளன் முன்னிலையில், ஊராட்சி மன்ற செயலர் சங்கரன் தலைமையில் உறுதி மொழி வாசிக்கப்பட்டது.

பொழிச்சலூர் ஊராட்சி 15 வார்டுகளில் உள்ள பொதுமக்கள், தங்களுடைய பகுதிகளில்

சாலை வசதி,

தெருவிளக்குகள் அமைப்பு,

மழைநீர் வடிகால் கால்வாய்,

புதிதாக பவானிநகரில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு,

தெரு நாய்கள், மாடுகள், பன்றிகள் தொல்லை,

குப்பை காரணமாக ஏற்படும் துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு
போன்ற பிரச்சினைகள் குறித்து கோரிக்கை வைத்தனர்.


இதற்குப் பதிலளித்த MLA இ. கருணாநிதி அவர்கள்,

“பொழிச்சலூர் ஊராட்சியில் குப்பை அகற்றும் பணிக்காக ரூ.70 லட்சம் செலவில் 5 டிராக்டர்கள் மற்றும் ஒரு லாரி வாங்கப்பட்டுள்ளது. குப்பைகள் சேராமல் நடவடிக்கை எடுக்கப்படும்; பொதுமக்கள் கூறிய பிரச்சினைகளை தாமாக நேரில் ஆய்வு செய்து தீர்வுகாண்பேன்,”
என உறுதி அளித்தார்.

அதிகாரிகள் மற்றும் போலீசார் பங்கேற்பு:

நிகழ்ச்சியில் பல்லாவரம் வட்டாட்சியர் நடராஜ்,
மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார்,
கிராம அலுவலர் ராதா,
ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் செல்வராஜ், அமிர்தம் பழனியம்மாள், நாகராஜ், சுரேஷ், ஹேம பூசணம் மாரி, பியூலா தேவன் அன்பு,
பொழிச்சலூர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு பணியில் T–4 பம்மல் சங்கர் நகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலைமை காவலர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.


✍️ செய்தி: சேக் முகைதீன் 

இணை ஆசிரியர்,

தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க்.

 

By TN NEWS