📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக்கல்லூரியில் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக விதை பந்து தயாரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகளில் பசுமை வளர்ச்சிக்காக மொத்தம் 7.5 லட்சம் விதை பந்துகளைத் தயாரித்து வீசும் திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று குடியாத்தம் கலைக்கல்லூரியில் 4 லட்சம் விதை பந்துகள் தயாரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வி. அமுலு விஜயன், மற்றும் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் வட்டாட்சியர் பழனி, சமூக ஆர்வலர் சரவணன், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று விதை பந்துகளை உருவாக்கினர், இது சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த முயற்சியாக பாராட்டப்பட்டது.
📰 செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்
