Thu. Nov 20th, 2025



📍 திருச்சி மாவட்டம், செப்டம்பர் 13

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.09.2025 அன்று மிளகாய் பொடி வீசி, சுமார் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் மீது போலீசார் விரைவான நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், விரிவான விசாரணை மற்றும் புலனாய்வின் மூலம் குற்றவாளிகளை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போலீசார் 9.681 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள், ₹6,05,500 ரொக்கம், கொள்ளையில் பயன்படுத்திய கார், நாட்டு துப்பாக்கி (1), தோட்டாக்கள் (2), ஸ்மார்ட் செல்போன்கள் (7), பட்டன் போன் (1), சிம் கார்டுகள் (40), ₹100 பத்திரம் (2), ஜூவல் டேக் (5) மற்றும் விசிட்டிங் கார்டுகள் (5) ஆகியவற்றை கைப்பற்றினர்.

போலீசார் தொடர்ந்த விசாரணையில் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட நுட்பங்களையும், இதில் சம்பந்தப்பட்ட வலையமைப்புகளையும் கண்டறிந்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

📰 செய்தி: விக்னேஷ்வர்

 

By TN NEWS