Thu. Nov 20th, 2025

 


📍 குடியாத்தம், வேலூர் மாவட்டம் — அக்டோபர் 10

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக மனநலம் ஆரோக்கிய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ. சௌந்தரராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனித்துரை வரவேற்புரை ஆற்றினார்.
அத்தி கிளை மருத்துவர் டாக்டர் ஆ. கென்னடி தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வேலூர் மாவட்ட மனநல திட்டம் மருத்துவர் டாக்டர் புகளரசி (MBBS., DPM) மற்றும் மாவட்ட மனநல திட்டம் சமூக பணியாளர் திருமதி அன்னை தெரசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து அவர்கள் “மனநலத்தோடு இருந்தாலே ஆரோக்கியமான வாழ்வு சாத்தியம்; யோகா, உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு வழியாக மனநலம் பராமரிக்கலாம்” என சிறப்புரை ஆற்றினர்.

நிகழ்ச்சியில் அத்தி செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
மாணவிகள் மனநல விழிப்புணர்வை நாடகம் மூலம் சிறப்பாகக் காட்சியளித்தனர்.

மேலும் குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கா. குமரவேல்,
அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியை அத்தி குழும நிர்வாக அறங்காவலர் டாக்டர் சௌ. சுகநாதன் ஒருங்கிணைத்தார்.

📰 செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS