🏏 முதல் முறையாக மதுரையில் கிரிக்கெட் மைதான திறப்பு விழாவில் ‘தல’ தோனி பங்கேற்பு!
மதுரை:
முதல் முறையாக மதுரையில் கிரிக்கெட் மைதானம் திறக்கப்படும் வரலாற்று நிகழ்ச்சி இன்று சிந்தாமணி பகுதியில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்கிறார். மும்பையில் இருந்து தனி விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்த தோனி, அங்கிருந்து காரில் சிந்தாமணி ஸ்டேடியத்துக்குச் சென்றார்.
தோனியின் வருகையை வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் காலை முதலே விமான நிலையம் மற்றும் சாலையோரங்களில் திரண்டிருந்தனர்.
‘தல’ தோனியை ஒரு பார்வை காண ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், தோனி மீண்டும் மதுரை விமான நிலையம் வழியாக தனி விமானத்தில் மும்பைக்கு புறப்படவுள்ளார்.
தோனியின் வருகையையொட்டி, மதுரை விமான நிலையம் மற்றும் ஸ்டேடியம் சுற்றுவட்டாரங்களில் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
📰 செய்தி: வசந்தகுமார்
📍மதுரை மாவட்டம்