🚨 சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம், பொய்குணம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் @ சிவகுமார் (52) என்பவர், 13 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 08.09.2025 அன்று திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
குற்றவாளி தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்பதால், அவரது நடவடிக்கை பொது அமைதி மற்றும் ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கருதி,
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். மாதவன் அவர்களின் பரிந்துரையின் பேரில்,
மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் (இ.ஆ.ப) அவர்கள், பரமசிவத்தை ஒராண்டு காலம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி இன்று (09.10.2025) கடலூர் மத்திய சிறையில் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து,
“குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; தேவையானால் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படும்”
என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ். மாதவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📰 செய்தி: வி. ஜெய்ஷங்கர்
தலைமை செய்தியாளர் – கள்ளக்குறிச்சி மாவட்டம்
