Thu. Nov 20th, 2025

🗞️ விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் நற்பெயரை கெடுக்கும் செயல் – காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!

சென்னை, அக்டோபர் 9:
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னை உயர் நீதிமன்ற வாசலில் 07.09.2025 அன்று நடந்த நிகழ்வில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது உரையை முடித்து விட்டு வாகனத்தில் செல்லும் போது, வழக்கறிஞர் ராஜீவ் காந்தி திட்டமிட்டு வாகனத்தை வழி மறித்து வம்புக்கு இழுத்தது மிகக் கண்டிக்கத்தக்கது,”
என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, திருமாவளவன் வாகனம் தான் இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டதாக பொய்யான செய்திகளைப் பரப்பும் சிலர், அவரது நற்பெயரைக் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

“வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் இச்செயலை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. அவர் யாரின் தூண்டுதலில் இதைச் செய்தார், இதன் நோக்கம் என்ன என்பதை காவல் துறை முழுமையாக விசாரித்து உடனடியாக கைது செய்ய வேண்டும்,”

என்று காயல் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,

“இந்திய அளவில் சனாதனத்தை எதிர்த்து எந்தவித சமரசத்திற்கும் இடமளிக்காமல் அரசியலில் தன்னலமின்றி செயல்பட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசிய தலைவர் திருமாவளவனுக்கு உயர் பாதுகாப்பு வழங்க வேண்டும்,”

என மத்திய மற்றும் மாநில அரசுகளை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

🖋️ செய்தி: விக்னேஷ்வர்

 

By TN NEWS