Thu. Nov 20th, 2025

🏆 மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை கபடி போட்டியில் தேனி மாவட்டத்திற்கு இரண்டாம் இடம்

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுக்கோணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கா.விஜயன் – வி.தனலட்சுமி தம்பதியரின் மகன் வி.அமுதன், கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) தேனி மாவட்ட விளையாட்டு விடுதியில் கபடி வீரராக சிறப்பாக விளையாடி வருகிறார்.

தற்போது அவர் தேனி மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை (CM Trophy) பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் தேனி மாவட்டத்திற்காக விளையாடிய அவர், இரண்டாம் இடத்தைப் பெற்று, வெள்ளி பதக்கம் மற்றும் ₹6,00,000 (ஆறு இலட்சம்) பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்.

இச்சாதனை மூலம் வி.அமுதன், தேனி மாவட்டத்திற்கும் தர்மபுரி மாவட்டத்திற்கும், மேலும் FAKC மூக்காரெட்டிப்பட்டி கபடி அணிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாவட்ட மக்கள், விளையாட்டு ரசிகர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் வி.அமுதனை வாழ்த்தி வருகிறார்கள்.

📸 செய்திகள் : பசுபதி

By TN NEWS