Sun. Oct 5th, 2025

“வீரம் மரணமில்லை… அது வரலாறாகும்!”

நெல்லை மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி மன்னன் வீரபாண்டியா கட்டபொம்மன் — தமிழின் முதல் சுதந்திரச் சின்னமாக விளங்கியவர்.


ஆங்கிலேய ஆட்சியின் அடிமைத்தனத்துக்கு எதிராக “வரி கொடுக்க மாட்டேன்!” என்ற வீரக் குரல் எழுப்பிய தமிழரின் பெருமைப் பிள்ளை அவர்.

1799-ம் ஆண்டு பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதி தலைமையிலான படை பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை முற்றுகையிட்டது.


அது அக்டோபர் 05, 1799.

இன்று, அவரது தியாகத்தையும் வீரத்தையும் தமிழ்நாடு பெருமையுடன் நினைவு கூருகிறது.
கட்டபொம்மன் உயிர் போனாலும், அவரது வீரம் இன்று ஒவ்வொரு தமிழரின் இதயத்திலும் பளிச்சிடுகிறது.

🕊️ “கயத்தாறின் தூக்குக் கயிறு ஒரு வீரனின் மரணத்தை அல்ல, ஒரு தேசத்தின் விழிப்புணர்வை உருவாக்கியது.”


🇮🇳 வீரபாண்டியா கட்டபொம்மன் வாழ்க! அவரது வீரச் சிந்தனை நிலைக்க வாழ்க!


அங்கு நடந்த கடும் போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். ஆனால் கோட்டை வீழ்ந்ததும், கட்டபொம்மன் வீரத்துடன் போரிட்டு தஞ்சம் தேடி புதுக்கோட்டைக்கு சென்றார்.
அங்கு ரகுநாத தொண்டைமான் மன்னரிடம் தஞ்சம் புகுந்த அவர் பின்னர் ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கயத்தாறில் சிறையில் அடைக்கப்பட்ட கட்டபொம்மன் மீது விசாரணை நடத்தப்பட்டு, “இந்த மண் எனது தாய்மண்… இதற்காக உயிர் கொடுப்பேன்” என்று கூறியபடி வீரமரணம் ஏற்றார்.

சேக் முகைதீன்

இணை ஆசிரியர்

By TN NEWS