தென்காசி:
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. அரவிந்த் அவர்களின் தலைமையில், கனிமவள லாரி உரிமையாளர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்களுடன் வாகன விபத்துகளைத் தவிர்க்கவும், கால / வேக வரையறைகளை கடைப்பிடிக்கவும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திரு. N. சரவணபவன் (வட்டார போக்குவரத்து அலுவலர், தென்காசி), திரு. T. வினோத் (உதவி இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தென்காசி), திரு. செ. தமிழ் இனியன் (காவல் துணை கண்காணிப்பாளர், தென்காசி உட்கோட்டம்), திரு. S. கிளாட்சன் ஜோஸ் (காவல் துணை கண்காணிப்பாளர், ஆலங்குளம் உட்கோட்டம்), திரு. ஆ. வெங்கடசேகர் (வட்டாட்சியர், செங்கோட்டை வட்டம்) ஆகிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதேபோல் அனைத்து கிரஷர் உரிமையாளர்கள், இந்தியன் டிரைவர் சொசைட்டி செயலாளர், செங்கோட்டை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வாகனங்கள் கால வரையறை மற்றும் வேக வரையறையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. இதனை மீறினால், வாகன ஓட்டுநர்களுடன் கிரஷர் உரிமையாளர்கள் அல்லது நடத்துநர்களும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜே. அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்