📰 தமிழ்நாடு நிர்வாகத்தின் விழிப்புணர்வும், வேகமும், நாடு முழுவதும் எடுத்துக்காட்டாகும்!
அக்டோபர் 1, 2025.
கரூர் நிகழ்வின் பரபரப்பில் நாடு முழுவதும் கவனம் ஒரு திசையில் திரும்பியிருந்தது. ஆனால் அதே நாளில் — தமிழ்நாட்டில் அரசு இயந்திரம் எவ்வளவு விழிப்புணர்வுடன் செயல்படுகிறது என்பதை நிரூபிக்கும் ஒரு சம்பவம் அமைதியாக நடந்தது.
அன்றைய தினம், மத்தியப் பிரதேச மாநில சுகாதாரத்துறை, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு ஒரு அவசரக் கடிதம் அனுப்பியது.
அதில், அந்த மாநிலத்தில் ஒன்பது குழந்தைகள் சளி, காய்ச்சல், இருமல் போன்ற சிறு நோய்களுக்கு சிகிச்சை பெற்ற பின் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளனர் என கூறப்பட்டது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட மருந்துகளில் — குறிப்பாக ‘Coldrif’ Syrup (Batch SR-13) — குறித்து சந்தேகம் இருப்பதாகவும்,
அது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள Sresan Pharmaceuticals நிறுவனம் தயாரித்தது என்றும் தமிழ்நாடு அரசிடம் தகவல் கேட்கப்பட்டது.
🔍 விடுமுறை நாளிலும் வேகமான பதில்:
அன்று அரசு விடுமுறை நாள் என்றாலும், செய்தி கிடைத்த சில மணி நேரங்களிலேயே,
தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் தொழிற்சாலையை அடைந்து, முழுமையான ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் ….?
➡️ 39 கடுமையான மற்றும் 325 முக்கியமான விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன.
➡️ Coldrif உட்பட ஐந்து வகை சிரப்புகளின் மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
➡️ அனைத்து stockகளும் freeze செய்யப்பட்டது.
➡️ மாதிரிகள் ethylene glycol மற்றும் diethylene glycol (DEG) கலப்படம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
24 மணி நேரத்திற்குள், Coldrif Syrup தரமற்றது எனவும், அதில் 48.6% DEG கலந்திருப்பது எனவும் ஆய்வக அறிக்கை வெளிவந்தது.
இந்த DEG என்ற பொருள், paint மற்றும் industrial solvent தயாரிப்பில் பயன்படும் மிக ஆபத்தான வேதிப்பொருள்;
இதனை உட்கொள்வது குழந்தைகளின் கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் என்பதையும் அரசு உடனடியாக உறுதிப்படுத்தியது.
⚡ உடனடி அரசு நடவடிக்கை:
தமிழ்நாடு அரசு 24 மணி நேரத்திற்குள் —
✅ மாநிலம் முழுவதும் எச்சரிக்கை அறிவிப்பு (Statewide Alert) வெளியிட்டது.
✅ Coldrif Syrup விற்பனை மற்றும் விநியோகத்துக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டது.
✅ மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர் நிலையங்களிலுள்ள stockகளை உடனடியாக பிடித்தது.
✅ உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு உற்பத்தி நிறுத்த உத்தரவு மற்றும் Show Cause Notice வழங்கப்பட்டது.
✅ ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கும் துரிதமாக தகவல் அனுப்பப்பட்டது.
அனைத்தும் — ஒரே விடுமுறை நாளில் துரிதமாகச் செயல்பட்டது!
⚖️ மத்தியப் பிரதேசம் பின்னால்:
அதே மருந்தைச் சோதனைக்கு அனுப்பிய மத்தியப் பிரதேச அரசு,
அதன் முடிவை வெளியிட மூன்று நாட்கள் எடுத்தது;
அதுவும் ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின் மட்டுமே தடை உத்தரவை பிறப்பித்தது.
💬 இது தான் தமிழ்நாடு – வேறுபட்ட ஆட்சி மரபு!
தமிழ்நாட்டின் இந்த வேகமும் பொறுப்புணர்வும், நாட்டில் ஏனைய மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகும்.
“Public Health comes first” — என்பது வெறும் வாசகமல்ல,
தமிழ்நாட்டில் அது நேரடி செயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
“தமிழ்நாடு மற்ற மாநிலங்களைக் காட்டிலும் 100 மடங்கு மேலானது,
ஏனெனில் இங்கு அரசியலுக்கும் மேலாக மனிதநேயம் பேசுகிறது!”
✍️ சேக் முகைதீன்
இணை ஆசிரியர்