Sun. Oct 5th, 2025



கள்ளக்குறிச்சி மாவட்டம்:
திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் நகரில் “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இம்முகாமை திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் மற்றும் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, முகாமை நேரில் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், மாவட்ட துணை செயலாளர் டி. என். முருகன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் மு. தங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், நகர மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி குணா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

முகாமில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.

V.ஜெய்சங்கர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS