தென்காசி மாவட்டம்:
தென்காசி மாவட்டம் குலசேகரப்பட்டி பஞ்சாயத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த புதிய கட்டிடத்தில் திறப்பு விழாவை ஒட்டி கல்வெட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த கல்வெட்டுகள் சில சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்டவர்கள் பிடியோவிடம் (Block Development Officer) மனு அளித்தனர்.
ஆனால், அதற்கு வந்த பதிலில், “இவ்வாறு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி சமூக அலுவலர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள், “அரசு சொத்துகளை சேதப்படுத்தும் செயல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்