தென்காசி:
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனி நாடார், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், நகரச் செயலாளர் கணேசன், நகராட்சி ஆணையாளர் ரமா திலகம், நகராட்சி தலைவர் வள்ளி முருகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.
மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என பலரும் பங்கேற்று முகாமின் வாயிலாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.
ஜெ. அமல்ராஜ்,
தென்காசி மாவட்ட தலைமை நிருபர்