Sun. Oct 5th, 2025



அக்டோபர் 3 – வேலூர்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான விழிக்கண் மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில் குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் பங்கேற்று, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மதுசெழியன் அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் சமூகநீதியும் நலத்திட்டங்களும் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதைப் பரிசீலித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் இடம்பெற்றன.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS