Sun. Oct 5th, 2025



குடியாத்தம், அக்டோபர் 3

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் பிலிக்கண் கண்காணிப்பு குழு கூட்டத்தில், பெரும்பாடி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் வலியுறுத்தினார்.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். இதில், வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மதுசெழியன் முன்னிலையில், குழு உறுப்பினர் லாவண்யா தினேஷ் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தார்.

அதில்,

பெரும்பாடி கிராமத்தில் சாலை ஓர புறம்போக்கு நிலத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட வேண்டும்.

ஸ்டாலின் திட்ட முகாமில் எஸ்சி/எஸ்டி மக்கள் விண்ணப்பித்த தாட்கோ கடன்களை வங்கிகள் மறுக்கும் நிலை உள்ளது; இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கீழ் சென்றத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தனிநபருக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட வேண்டும்.

பேரணம்பட்டு மற்றும் குடியாத்தம் பகுதிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கான சமூக ஒற்றுமையை வலுப்படுத்த விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.


என பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்றன.

மேலும், இந்த கோரிக்கைகளை விசாரித்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS