Sun. Oct 5th, 2025



வேலூர் மாவட்டம் – குடியாத்தம்

குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சியில், அரசு நிதியில் பொதுப் பயன்பாட்டிற்கு தொடர்பில்லாத இடத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அல்லாமல், தனிநபரின் வீட்டு மனை பிரிவுக்காக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை “நிதி தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது” என மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு செல்லும் வழியின்மை குறித்து மக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தபோதும், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், புதியதாக நிலம் வாங்கியவருக்கு உடனடியாக கல்வெட்டு அமைத்தது கேள்விக்குறியாகியுள்ளது.

இது ஊழல் செயலாகவோ அல்லது பொதுநிதியின் தவறான பயன்படுத்தலாகவோ இருக்கலாம் என மக்கள் வலியுறுத்துகின்றனர். “எங்களுக்கு பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கே போக வழியில்லை, ஆனால் புதியவருக்கு உடனடியாக பாலம் அமைத்துள்ளனர்” என்று அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் எந்த வகையான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது குறித்து அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS