Sun. Oct 5th, 2025



அக்டோபர் 3 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்

நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்கான ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர். உமாபதி தலைமையில் நடைபெற்றது.

குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. அமலுவிஜயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவு பரிசுகளையும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக NSS திட்ட அலுவலர் ஆர். ஜெயகுமார் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் செ.நா. ஜனார்த்தனன், ரோட்டரி சங்க தலைவர் கே. சந்திரன், செயலாளர் கே. சுரேஷ், பொருளாளர் என். ஜெயச்சந்திரன், உதவி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம், முதுகலை பொருளியல் ஆசிரியர் கருணாகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி எ. தயாநிதி, பட்டதாரி ஆசிரியர் சங்கர், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் எம். கோவிந்தம்மாள், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி. தீபிகா பாரத், யு. அமுதாலிங்கம், உலக திருவள்ளுவர் பேரவையின் தலைவர் ஆர். அன்பு, ஊர் நாட்டாமை பெரியதனம், மற்றும் ஊர் பெரியவர்கள் பாபு லிங்கம், ரமேஷ், ஜலபதி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சீவூர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முன்னிலை வகித்தார். மேலும், பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், NSS மாணவர்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

முகாமின் அறிக்கையை உதவி திட்ட அலுவலர் அரி கிருஷ்ணன் வாசித்தார். பின்னர் நன்றியுரை நிகழ்ந்தது.

ஏழு நாள் சிறப்பு முகாமில் மரம் நடுதல், போதை விழிப்புணர்வு ஊர்வலம், பள்ளி வளாகத் தூய்மை பணி, பிளாஸ்டிக் மற்றும் போதை விழிப்புணர்வு சாதனை, பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், சித்த மருத்துவம், இலவச காய்கறி மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல், கால்நடைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற பல சமூகப்பணிகள் நடைபெற்றன.

மேலும் “இன்றைய மாணவ சமுதாயத்தை ஊடகங்கள் நல்வழிப்படுத்துகிறதா அல்லது சீரழிக்கிறதா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம், சிரிப்பு யோகா, சிக்கனமும் சிறுசேமிப்பும், புத்தகம் பேசுது போன்ற நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தன.

இந்த முகாம் சமூக சேவையையும் விழிப்புணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்திய முகாமாக மக்கள் பாராட்டினர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

 

By TN NEWS