தருமபுரி, செப்டம்பர் 26 – அக்டோபர் 2, 2025:
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூரில் நாட்டு நலப்பணி (NSS) திட்ட சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை சிறப்பாக நடைபெற்றது.
இம்முகாமில் மாணவர்களுக்கு சமூகப் பணிகள், ஒற்றுமை, மற்றும் பேரிடர் காலங்களில் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பன குறித்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் கலந்து கொண்டு,
முதலுதவி செய்வது எப்படி,
தீ விபத்து, இயற்கை பேரிடர் போன்ற அவசர காலங்களில் தற்காப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு முறைகள்,
நாட்டு நலப்பணி திட்டத்தின் சமூக நலனுக்கான பங்களிப்பு
என மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் இரா. ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
வரவேற்புரை : திட்ட அலுவலர் இரா. கதிரேசன்
வாழ்த்துரை : இணை திட்ட அலுவலர் து. சக்திவேல்
சிறப்புரை : அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர்
நன்றியுரை : ஆசிரியர் பகுதி சேகர்
மாணவர்களின் உற்சாக பங்களிப்பால் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது.
🖋️ பசுபதி, தலைமை செய்தியாளர்