Sun. Oct 5th, 2025



வேலூர், அக்டோபர் 2:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ளி வருவாய் கிராமம் – மாதணூர் நெடுஞ்சாலையில், பாலாறு பாலம் அருகே செயல்பட்டு வரும் ஆறுமுகம் ஐயங்கார் பேக்கரியில் ஏற்பட்ட நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வளத்தூர் அருகே ராசம்பட்டி பகுதியைச் சேர்ந்த திரு. ராஜேஷ் என்பவர், தனது உறவினர்கள் இருவரின் பிறந்தநாள் விழாவிற்காக இரண்டு கேக் ஆர்டர் செய்திருந்தார். அக்டோபர் 2 ஆம் தேதி காலை 11.00 மணியளவில் கேக் பெற்று, பிறந்தநாள் விழாவில் வெட்டி பகிர்ந்தபோது, கேக்கில் சிறுசிறு புழுக்கள் அதிக அளவில் இருப்பது வெளிச்சமிட்டது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர், பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பேக்கரிக்கு சென்று புகார் கூறியபோது, கடை ஊழியர்கள் அந்தக் கேக்கை பறித்து எடுத்து, எரியும் அடுப்பில் எரித்துவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுத்தமற்ற மற்றும் கெட்டுப்போன உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால், பொதுமக்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

உணவு பாதுகாப்புத் துறையினர் உடனடியாக சம்பவம் தொடர்பாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

உணவு பாதுகாப்பு புகார் தொடர்பு எண்கள்:

📱 WhatsApp கம்ப்ளைண்ட் எண்: 9444042322

☎️ தொடர்பு (மாநில அலுவலகம்): 044-24350983

📞 FSSAI / மாநில உதவி டெஸ்க் எண் (தமிழ்நாடு): 09444042322

📌 வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் — Senthilkumar, மொபைல்: 9444826258

🖋️ செய்தியாளர்: கேவி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா

By TN NEWS