விழுப்புரம் மாவட்டத்தில் “பசுமை தமிழ்நாடு இயக்கம் தினம்” – மரக்கன்றுகள் நடும் விழா!
விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு வனத்துறை சார்பில் “பசுமை தமிழ்நாடு இயக்கம் தினம்”நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. இதில் மாணவர்களுடன் இணைந்து சட்ட மன்ற உறுப்பினர் க. பொன்முடி (MLA) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் Dr. Gautham Sigamani, வனவியல் விரிவாக்க அலுவலர் தர்மலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம. ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் இரா. ஜனகராஜ், பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், ஒன்றிய செயலாளர்கள் ஜெ. ஜெயபால், வேம்பி. ரவி, நகர செயலாளர் நயினா முகமது, பேரூராட்சி துணை தலைவர் ச. பாலாஜி, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி தலைவர் பாபுஜீவானந்தம், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முதன்மை செய்தியாளர்: V. ஜெய்சங்கர், கள்ளக்குறிச்சி