Sun. Oct 5th, 2025

திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது – 9 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்:

விழுப்புரம் மாவட்ட காவல்துறை, ஆரோவில் காவல் நிலையம், தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்ட நான்கு சந்தேகநபர்களை அதிரடி கைது செய்தது. அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் IPS உத்தரவின் பேரில், உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் உமாதேவி மேற்பார்வையில், ஆரோவில் காவல் நிலைய ஆய்வாளர் திருமால், உதவி ஆய்வாளர் திரு. மணிமாறன் தலைமையில் கடந்த சில மாதங்களாக கோட்டகுப்பம், கிளியனூர், ஆரோவில் பகுதிகளில் இடம்பெற்ற இருசக்கர வாகன களவுகள் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இன்று திருச்சிற்றம்பலம், கூட்ரோடு அருகே திண்டிவனம் TO பாண்டி மார்க்கில் வாகன தணிக்கையின் போது, சந்தேக நபர்கள் நிறுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

கைதான நபர்கள்:

1. தமிழ் (தமிழ்ச்செல்வன்), வயது 24 – முருங்கை கிராமம், மரக்காணம் தாலுகா


2. கிஷோர், வயது 22 – திண்டிவனம்


3. ராகுல், வயது 24 – வைராபுரம், திண்டிவனம்


4. சந்து (சந்து குமார்), வயது 21 – திண்டிவனம்





சந்தேக நபர்களிடம் இருந்து 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் குற்றத்திற்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், அவர்கள் இரவு நேரங்களில் தனியாக நிற்கும் இருசக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருடி, விற்பனை செய்து வருவாய் மூலம் வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் பழக்கம் கொண்டிருந்தது. இவர்கள் புதுச்சேரி சென்று திரும்பும் போது கைது செய்யப்பட்டனர்.

V. ஜெய்ஷங்கர் – கள்ளக்குறிச்சி முதன்மை செய்தியாளர்

By TN NEWS