குடியாத்தம், செப்டம்பர் 14:
வேலூர் மாவட்ட பார்வை இழப்போர் தடுப்பு சங்கம், சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்கம், சென்னை டாக்டர் அகர்வால் ஆராய்ச்சி மையம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் சேம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமில் ஒன்றைத்தலைவலி, கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு, கண்ணில் புரை, தொடர்ச்சியான தலைவலி போன்ற பிரச்சனைகளுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் வழங்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பரிசோதனை செய்துகொண்டனர்.
நிகழ்ச்சியை சேம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் துளசிராமுடு, ஒன்றிய குழு உறுப்பினர் பிரகாசம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.
இதில் ஊராட்சி துணைத் தலைவர் சௌந்தர்ராஜ், ஊராட்சி செயலாளர் கோட்டிஸ்வரன், அப்துல் கலாம் ஆட்டோ சங்க பொதுச் செயலாளர் வினோத், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமினை சட்ட உரிமை பாதுகாப்பு மக்கள் நல சங்க வடக்கு மண்டல செயலாளர் பாக்யராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், மா.இ. ஹரிதாஸ், ஒன்றிய செயலாளர்கள் கோபி, நரசிம்மன், நகர செயலாளர் கருணாநிதி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிறைவாக, சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் சதிஷ் குமார், மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், செவிலியர்கள் என பலர் பங்கேற்று முகாமை வெற்றிகரமாக நடத்தினர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்