Mon. Oct 6th, 2025



குஜிலியம்பாறை, செப்டம்பர் 7:
குஜிலியம்பாறை தாலுகா, பாளையம் அருகே பாம்பாட்டி களம் என்ற இடத்தில் துயர சம்பவம் ஒன்று ஏற்பட்டது.

சாலையோரத்தில் ஒரு டிப்பர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அந்த லாரியின் டிரைவர் அதன் பின்புறத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அருகே டிரைவரில்லாமல் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லாரி திடீரென நகர்ந்து வந்து, நின்றிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் மோதி விட்டது.

இந்த விபத்தில், பின்புறத்தில் நின்று கொண்டிருந்த டிரைவர் சிவானந்தம் (ஈரோடு மாவட்டம், கோவிந்தபாளையம் கிராமம்) கடுமையாக காயமடைந்து, முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு டுடே செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம்

செய்தியாளர்: ராமர்

By TN NEWS