திண்டுக்கல்லில் அதிமுக கூட்டத்தில் பரபரப்பு – செய்தியாளர் செல்போன் பறிப்பு, பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல்
திண்டுக்கல், செப்டம்பர் 7:
திண்டுக்கல்லில் எடப்பாடி பழனிச்சாமி தங்கியிருந்த ஹோட்டலில் கட்சியினருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் அங்கு உணவு வழங்கப்படவில்லை என சில கட்சியினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வை செய்தியாக பதிவு செய்ய சென்ற தமிழ்நாடு டுடே செய்தியாளர் நாகராஜன், அதனை வீடியோ எடுக்க முயன்றபோது, அங்கிருந்த அதிமுக கட்சியினரால் அவரது செல்போன் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, செய்தியாளரும் நிர்வாகிகளும் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. சம்பவம் குறித்து எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல் மாவட்டத்தின் அனைத்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களும் ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திடீர் பரபரப்பு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசார் தலையிட்டு நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.
✍️ திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாடு டுடே – ராமர்