Sun. Oct 5th, 2025



தருமபுரி மாவட்டம் அரூர் ரவுண்டனவில் அன்னை தெரேசா நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதலில் அன்னை தெரேசா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அக்ராகரம் லிட்டில் டிராப்ஸ் ஆதரவற்ற இல்லத்தில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு அன்னை தெரேசா பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அன்னை தெரேசா பேரவை மாநில பொறுப்பாளர் தேசம் குமார், மாவட்ட செயலாளர் பழனிதுரை, துணைத் தலைவர் பிரேம்குமார், சட்ட ஆலோசகர் முருகன் வேல்விழி உள்ளிட்ட பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ஆதரவற்ற பெற்றோர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் அன்னை தெரேசா பேரவை மாவட்ட செயலாளர் பழனிதுரை நன்றி உரையாற்றி விழா நிறைவு பெற்றது.

பசுபதி
தலைமை செய்தியாளர்

 

By TN NEWS