Sun. Oct 5th, 2025


தென்காசி:
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான 108, 102, 155377 அவசர கால ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்ற ஓட்டுநர்கள் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர்களை தேர்வு செய்யும் வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தென்காசி அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

தமிழகம் முழுவதும் 108, 102, 155377 சேவைகள் 24 மணி நேரமும் முழுக்க முழுக்க இலவசமாக பொதுமக்களுக்கு கிடைக்கிறது. 108 சேவை அவசர மருத்துவம், காவல், தீயணைப்பு போன்ற அனைத்தையும் ஒருங்கிணைக்கும் எண்.

🔹 EMRI GREEN HEALTH Services நிறுவனம், தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ், தமிழக அரசுடன் இணைந்து இந்த சேவையை நடத்துகிறது. இதன் கீழ் பணியாற்ற விரும்புவோருக்கான தேர்வு முகாம் நடைபெறுகிறது.

📌 மருத்துவ உதவியாளர் பணிக்கான தகுதிகள்:

B.Sc Nursing, GNM, ANM

DMLT (12ம் வகுப்பிற்கு பின் 2 வருட பாடநெறி)

Life Science பிரிவுகள்: B.Sc Zoology, Botany, Biochemistry, Microbiology, Biotechnology

வயது: 19 – 30

ஊதியம்: ரூ.21,320 (மொத்தம்)

தேர்வு முறை:

1. எழுத்துத் தேர்வு


2. மருத்துவ நேர்காணல் (முதலுதவி/அடிப்படை செவிலியர் பணி)


3. மனிதவளத்துறை நேர்காணல்



பயிற்சி: 50 நாள் (வகுப்பறை + மருத்துவமனை + ஆம்புலன்ஸ் நடைமுறை). தங்குமிடம் வழங்கப்படும்.

📌 ஓட்டுநர் பணிக்கான தகுதிகள்:

குறைந்தது 10ம் வகுப்பு தேர்ச்சி

வயது: 24 – 35

உயரம்: குறைந்தபட்சம் 162.5 செ.மீ.

ஊதியம்: ரூ.21,120 (மொத்தம்)

ஓட்டுநர் உரிமம்:

இலகுரக வாகன உரிமம் 3 வருட அனுபவத்துடன்

Badge உரிமம் குறைந்தபட்சம் 1 வருட அனுபவத்துடன்


தேர்வு முறை:

1. எழுத்துத் தேர்வு


2. தொழில்நுட்பத் தேர்வு


3. HR நேர்காணல்


4. பார்வை சோதனை


5. விதிமுறைகள் தேர்வு


6. சோதனை ஓட்டம் (Test Drive)



பயிற்சி: 10 நாள்


📍 முகாம் நடைபெறும் இடங்கள்:

செப்டம்பர் 6 (சனி): திருநெல்வேலி மாவட்டம், கீழமுன்னீர்பள்ளம், ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில், சமுதாய நலக்கூடம் அலுவலகம்.

செப்டம்பர் 7 (ஞாயிறு): தென்காசி அரசு மருத்துவமனை வளாகம்.


📞 தொடர்புக்கு: 73977 24825, 73977 24853

தொகுப்பு:

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

By TN NEWS