Sun. Oct 5th, 2025

📰 தென்காசியில் நடைபெற்ற காகித வெண்கல விழாவில்,
தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர் ஜே. அமல்ராஜ் அவர்கள் சேவை செம்மல் விருது பெற்றார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில், ஆல் பிரஸ் & மீடியா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் காகித வெண்கல விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், சங்கத்தின் தலைவர் மற்றும் தினவிடியல், துணிந்து நில் பத்திரிகை ஆசிரியரான திரு. எம். கார்த்திகேயன் (M.A, B.Ed, D.T.Ed, M.Phil) அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் திரு. சந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் முன்னிலையில் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில், நீண்டகாலமாக பத்திரிகைத் துறையில் உழைத்து சமூக அக்கறை, மக்கள் நலனுக்காக அயராது பணியாற்றி வருபவராகிய மூத்த பத்திரிகையாளரும், தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர், தென்காசி மாவட்டம், திரு. ஜே. அமல்ராஜ் அவர்களுக்கு, “சேவை செம்மல் விருது” வழங்கப்பட்டது.

விருது வழங்கப்பட்டதை அடுத்து, நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அமல்ராஜ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

🎉தமிழ்நாடு டுடே குழுமத்தின் வாழ்த்துக்கள் 👑

மூத்த பத்திரிகையாளரும் தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர், தென்காசி மாவட்டம்,திரு. ஜே. அமல்ராஜ்
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பத்திரிகைத்துறையில் வழங்கிய நீண்டகால பணி, சமூக அக்கறை மற்றும் உண்மை நேர்மைக்கான பங்களிப்பிற்காக முதல் விருது பெற்றுள்ளார்.

📰 தமிழ்நாடு டுடே குழுமம் சார்பில்,
திரு. ஜே. அமல்ராஜ் அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த பாராட்டு மற்றும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

“உங்கள் பணி தொடர்ந்து சமூகநீதி, உண்மைத்தன்மை, மக்கள் நலன் ஆகியவற்றை வெளிக்கொணரும் ஒளிவிளக்காக இருந்து வர வாழ்த்துகிறோம்.”

✨ தமிழ்நாடு டுடே குழுமம் ✨
(TNT Press Family)

By TN NEWS