குடியாத்தம், ஆகஸ்ட் 30:
குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விஜர்சன ஊர்வலம் இன்று நடைபெற்றது.
ஊர்வலம் பிடிஓ அலுவலகம் அருகில் பொதுக்கூட்டத்துடன் துவங்கியது. நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி நகரத் தலைவர் யுவசங்கர் தலைமை தாங்கினார். குடியாத்தம் பாஜக நிர்வாகி சாய்ஆனந்த் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில தலைவர் சுனில் குமார் கலந்து கொண்டு எழுச்சியுரையாற்றினார். வி. ஜெகதீசன் கொடியசைத்து ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
விநாயகர் ஊர்வலம் பிடிஓ அலுவலகம் அருகில் துவங்கி காங்கிரஸ் ஹவுஸ் ரோடு, அரசு மருத்துவமனை பின்புறம், பழைய பஸ் நிலையம், பெரியார் சிலை சந்திப்பு, காமராசர் பாலம், நகைக்கடை பஜார், சிலை சந்திப்பு, காந்தி சிலை சந்திப்பு, பெரும்பாடி ரோடு ஆகிய வழியாக சென்று, நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
ஊர்வலத்தில் சுமார் 12 விநாயகர் சிலைகள் பங்கேற்றன. மயிலாட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பாதுகாப்பு ஏற்பாடுகளில் குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். போக்குவரத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார் சீர்செய்தார்.
நிகழ்ச்சியில் அண்ணாமலை வெள்ளை யோகானந்தம், குடியாத்தம் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
📌 குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்