குடியாத்தத்தில் மக்கள் நலன் கருதி இலவச மருத்துவ முகாம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பலமனேர் சாலை, கவரைத் தெரு எதிரில், Dr.M.K.P ஹோமியோ கிளினிக், SBL World Class Homoeopathy மற்றும் சுவாமி மெடிக்கல்ஸ் ஆகியவை இணைந்து, இன்று (ஆகஸ்ட் 31) பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர்.
இந்த முகாமுக்கு பி.எல்.என். பாபு தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக டாக்டர் பி. அபிராமி கலந்து கொண்டு நேரடியாக பரிசோதனை செய்து சிகிச்சை வழங்கினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் மூட்டு வலி, கை-கால் வலி, மார்பு சளி, இரும்பல், காஸ்ட்ரிக் பிரச்சனை, இருதயத் துடிப்பு, குழந்தைகளின் பசியின்மை, பெண்களின் மாதவிடாய் சிக்கல், வெள்ளைப்படுதல், இடுப்புவலி, ஆஸ்துமா, அலர்ஜி, சைனஸ், மூச்சுத்திணறல், தும்பல், மூக்கில் நீர் வடிதல், சிறுநீரக கல் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருத்துவர்கள் விரிவான ஆலோசனை வழங்கினர். மேலும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன.
சமூக பொறுப்புணர்வோடு நடத்தப்பட்ட இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். பொதுமக்களின் ஆரோக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட இந்த முகாம் குடியாத்தம் பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்.