Mon. Oct 6th, 2025

வேலூர் மாவட்டம் – ஆகஸ்ட் 30

குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட மோடி குப்பம், தனகொண்டபள்ளி, மோர் தானா ஊராட்சிகளுக்காக இன்று கொட்டமிட்டா அரசு மேல்நிலைப் பள்ளியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தனகொண்டபள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் என். மோகன் தலைமை தாங்கினார்.
மோடி குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
மோர் தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் வரவேற்புரை ஆற்றினார்.

இம்முகாமில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

இதில் ஒன்றிய பெருந்தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டாட்சியர் கி. பழனி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, ஒன்றிய குழு உறுப்பினர் கோதண்டன், நத்தம் பிரதீஷ், வருவாய் ஆய்வாளர்கள் அசோக்குமார், கார்த்தி, புகழரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் சசிகுமார், செந்தில், காந்தி, லதா மற்றும் 13 துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்த முகாமில் பொதுமக்கள் மகளிர் உரிமைத் திட்டம், இலவச வீட்டு மனை, குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

இறுதியில் ஊராட்சி செயலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

📌 குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்


By TN NEWS