Mon. Oct 6th, 2025

பத்திரிக்கைச் செய்தி
PR No.54
திண்டுக்கல் மாவட்டம்

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – திண்டுக்கல் காவல்துறையின் சிறப்பான நடவடிக்கை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், 2022ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சுரைக்காய்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமர் (60) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ. பிரதீப், இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி, ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பேபி, நீதிமன்ற தலைமை காவலர் திருமதி. கார்த்திகை வேணி, அரசு வழக்கறிஞர் திருமதி. மைதிலி ஆகியோரின் தீவிர முயற்சியினால் இன்று (29.08.2025) நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, குற்றவாளி ராமருக்கு ஆயுள் தண்டனையுடன், கூடுதலாக ஒரு வருட சிறைத் தண்டனை மற்றும் ரூ.11,000 அபராதம் விதிக்கப்பட்டது.

👉 குறிப்பிடத்தக்கது என்னவெனில், இந்த ஆண்டில் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 44 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

📌 செய்திகள்: ராமர் – திருச்சிராப்பள்ளி


By TN NEWS