குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஜெய்பீம் நகரில் 44வது ஆண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் விழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டை ஜெய்பீம் நகர் ஏரிக்கரை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 44வது ஆண்டு 108 பால்குடம் விழா இன்று (ஆகஸ்ட் 29) ஆன்மிக உற்சாகத்துடன் நடைபெற்றது.
பால்குடம் கமிட்டி தலைமையில் நடந்த இந்த விழாவில், தேவி மாசுபாடு அம்மன் கோவிலிலிருந்து பக்தர்கள் 108 பால்குடங்களை தலைமேல் சுமந்து, பம்பை இசை முழங்க ஊர்வலமாக வந்து, ஏரிக்கரையில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மூலவர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தனர்.
விழாவை சிறப்பு அழைப்பாளராக அண்ணா திமுக குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சிவா, அவைத்தலைவர் பிச்சான்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கு ஜெய்பீம் நகர் ஊர் தர்மகர்த்தா கு. முனிசாமி, ஊர் நாட்டாண்மை க. முனிசாமி, ஊர் கௌரவ தலைவர் எஸ். கோவிந்தராஜ், தலைவர் கே. சரவணன், செயலாளர் செ. முருகன், பொருளாளர் ம. நவீன்குமார் முன்னிலை வகித்தனர்.
அதேபோல், ஊர் நிர்வாகிகள் மு. பஞ்சாட்சரம், க. ஜீவா, ச. கோபி, மு. நாகராஜ், பெருமாள், வண்டிகார் சண்முகம் உள்ளிட்டோர் மற்றும் ஊர் இளைஞர்கள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
🖊️ குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்