குடியாத்தம் பெரும்பாடி ஸ்டாலின் நகரில் விநாயகர், முனீஸ்வரர், காளியம்மன் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்தின் பெரும்பாடி ஊராட்சி, ஸ்டாலின் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர் – ஸ்ரீ முனீஸ்வரர் – ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29) பக்தி மகிமையுடன் நடைபெற்றது.
காலை நேரம், மேளதாளம் – நாதஸ்வர இசை முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் விழா தொடங்கியது. பின்னர், பக்தர்களின் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவுக்கு பெரும்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா செழியன் தலைமை தாங்கினார்.
ஆலய நிர்வாகி ஓய்வு பெற்ற ஆசிரியர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக,
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்,
அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் கல்லூர் ரவி,
தாட்டிமானபல்லி ஊராட்சி மன்ற தலைவர் சக்தி தாசன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுடன் தரிசனம் செய்தனர்.
ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என பலர் பெருவிழாவில் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பு ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
🖊️ குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்: கே.வி. ராஜேந்திரன்