திருச்சியில் இ.பி.எஸ். பிரச்சாரத்தின் போது ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு
திருச்சிராப்பள்ளி:
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேர்தல் பிரச்சார பயணத்தின் போது ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மருத்துவ சேவையில் ஈடுபடும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு எதிரான தாக்குதல்கள் கடுமையான குற்றமாகக் கருதப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஜாமீன் வழங்க இயலாது
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கும் சம்பவங்களில், குற்றவாளிகள் மீது ஜாமீன் வழங்க இயலாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படும். இதன் மூலம் குற்றவாளிகள் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் எனவும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.
3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை
மருத்துவப் பணியாளர்களை தாக்கியவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேவையை பாதித்தால் கடும் நடவடிக்கை
உயிரைக் காப்பாற்றும் அவசர சேவையாகும் ஆம்புலன்ஸ் சேவையை பாதிக்கும் வகையில் நடக்கும் எந்தவொரு வன்முறைக்கும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பாக எந்த வித தளர்வும் இருக்காது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
📰 ராமர் – செய்தியாளர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம்