Fri. Nov 21st, 2025

திண்டுக்கல்:
நாகல் நகர் மேம்பாலத்தில் இன்று அதிகாலை சாலை விபத்து ஒன்று நடந்தது.

இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது பின்னால் வந்த மினி பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. மோதலின் பலத்தால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த வாலிபர் இடுப்பில் கத்தி வைத்திருந்தது தெரியவந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து தொடர்பாக மினி பஸ் ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நாகல் நகர் பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் : ராமர் – திருச்சிராப்பள்ளி

By TN NEWS