நத்தம் அருகே அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வனப்பகுதியில் அருவி ஒன்று அமைந்துள்ளது. அங்கு மலையூரில் வசிக்கும் மக்கள் மட்டும் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி உண்டு.
ஆனால், வார இறுதிகளில் வெளியூரிலிருந்து வரும் சிலர் கார் மற்றும் பைக்குகளில் வந்து, அருவி பகுதியில் அசைவ உணவுகள் சமைத்து, மது அருந்தி அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும் காலியான மது பாட்டில்கள், கழிவுகளை அங்கு தூக்கி எறிவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
“இத்தகைய செயல்களை தடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மலையூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமர் – செய்தியாளர்