குடிநீர் வசதி கோரி தேவத்தூர் மக்கள் மனு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒட்டன்சத்திரம் தேவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மனு அளித்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது: “காவிரி குடிநீர் குழாய் இணைப்பு இருந்தும் கடந்த எட்டு மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும். மேலும் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரினர்.
ராமர் – திருச்சிராப்பள்ளி