வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாக்கம் ஊராட்சி, செல்ல பெருமாள் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் (Russell’s viper) பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்த தைரியத்துடன், லாபகமாக பாம்பைப் பிடித்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.
வீட்டுக்குள் புகுந்த பாம்பு காரணமாக மக்கள் அச்சத்துடன் இருந்த நிலையில், தீயணைப்புத் துறையினர் விரைவான நடவடிக்கை எடுத்ததால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்