சென்னையில் மழைக்கால சோகம் – மின்சாரம் தாக்கி பெண் பலி.
சென்னை கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளர் வரலட்சுமி (வயது 35) இன்று அதிகாலை வேலைக்கு சென்றபோது மழைநீரில் மூழ்கியிருந்த மின்கம்பி மீது காலை வைத்ததால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு சிறு பிள்ளைகளின் (12 வயது பெண், 10 வயது ஆண்) தாயான இவர் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார். திடீர் மரணம் அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பொது மக்களின் குற்றச்சாட்டு
கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்கம்பிகள் சாலையில் அபாயகரமாக கிடப்பதாக பலமுறை மின்சார வாரியத்திடம் புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எழில் நகர், பெரும்பாக்கம் போன்ற பகுதிகளிலும் இதே நிலை காணப்படுவதாக அறப்போர் இயக்கம் முன்னரே எச்சரித்திருந்தது.
சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்
“மின்சார பராமரிப்பு பணிகளில் அலட்சியம் காரணமாக அப்பாவி உயிர்கள் பலிகொடுக்கக் கூடாது. உடனடியாக விசாரணை நடத்தி, உயிரிழந்த தூய்மை பணியாளர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் ஈ.பி.அ. சரவணன் வலியுறுத்தினார்.
போலீசார் நடவடிக்கை
தகவல் அறிந்த கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சரவணக்குமார்