குடியாத்தம் அருகே அரசு மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை – ஒருவர் கைது
வேலூர் மாவட்டம், குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு டாஸ்மார்க் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலையில் விற்பனை செய்தவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் அடுத்த ராமாலை பகுதியில் வசித்து வரும் சுரேஷ் (51) தந்தை: ஆறுமுகம் என்பவர், டாஸ்மார்க் கடையில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை வாங்கி, அதை தனது வீட்டின் பாத்திரூம் மற்றும் முள் புதர்களில் மறைத்து வைத்து அதிக விலையில் விற்பனை செய்து வந்ததாக தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் பரதராமி போலீசார் ராமாலை பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சுரேஷ் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் பாட்டில்களை பறிமுதல் செய்ததுடன், சுரேஷை கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்