மொரட்டுபாளையம் ஊராட்சி – மக்களின் எழுச்சி போராட்டம்!
திருப்பூர் மாநகராட்சியின் சுத்திகரிப்பு செய்யப்படாத குப்பைகளை, ஊத்துக்குளி தாலுக்கா மொரட்டுபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியபாளையம், வெள்ளியம்பாளையம் பகுதிகளில் உள்ள பாறைக்குழிகளில் கொட்டியதில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
✍️ போராட்டக் காரணம்:
ஆண்டுதோறும் குப்பை மேலாண்மைக்காக 100 கோடி ரூபாய் திட்டம்.
அதில் 90 கோடி ரூபாயை SWMS நிறுவனம் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு.
நிலத்தடி நீர், விவசாய நிலம், குடிநீர் ஆதாரம் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம்.
முந்தைய காலங்களில் காளம்பாளையம், பொங்குபாளையம், நெருப்பெரிச்சல், முதலிபாளையம், பூண்டி அம்மாபாளையம், கீரனூர், இச்சிப்பட்டி, பூமலூர் உள்ளிட்ட இடங்களிலும் விஷக் கழிவு கொட்டியதாக குற்றச்சாட்டு.
🚨 போராட்டம்:
இன்று (19.08.2025, செவ்வாய்) காலை, வெள்ளியம்பாளையம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழ்வாதாரம், குடிநீர் ஆதாரம், விவசாய நிலம், காற்று மாசு ஆகியவை அழிவதை விளக்கி மக்கள் எழுச்சி காட்டினர்.
திருப்பூர் – விஜயமங்கலம் சாலை போக்குவரத்து பாதிப்பு.
பெரும் அளவில் காவல்துறை படையினர் குவிப்பு.
போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் கைது.
✊ மக்களின் கோரிக்கை:
நிலத்தடி நீரை தேக்கி வைக்கும் பாறைக்குழிகளில் விஷக் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்துக.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் SWMS நிறுவனத்துக்கிடையிலான சதித்தனமான ஒப்பந்தத்தை ரத்து செய்க.
கைது செய்யப்பட்ட 300 போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுவிக்கவும்.
📢 கண்டனம்:
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்
இரா. சா. முகிலன் – ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்
வழக்கறிஞர் ந. சண்முகம் – ஒருங்கிணைப்பாளர், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கம்
📌 திருப்பூர் செய்திகள்:
சரவணக்குமார்