தஞ்சாவூரை அடுத்த நரசநாயகபுரம் கிராமத்தில், மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் மண்டல மேலாளர் திரு. ஆண்டோலியோனார்ட் கலந்து கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவர் தொடர்ந்து,
சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ரூ.20 செலுத்தினால் விபத்து காப்பீடு மூலம் ரூ.2 லட்சம் இழப்பீடு,
ஆண்டுக்கு ரூ.436 செலுத்தினால் ஆயுள் காப்பீடு மூலம் ரூ.2 லட்சம் வரை இழப்பீடு, பெற முடியும் என தெரிவித்தார்.
மேலும், 18 முதல் 40 வயது வரையிலானவர்கள் மத்திய அரசின் அடல் பென்ஷன் திட்டத்தில் இணைந்து மாதாந்திர பிரீமியம் செலுத்தினால், 60 வயதுக்கு பிறகு மாதம் ரூ.5000 வரை பென்ஷன் பெறலாம் எனவும் அவர் விளக்கினார்.
இதன் மூலம் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் அனைவரும் பயனடைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர், மண்டல அலுவலக மேலாளர் திரு. பழனிமுத்து, வங்கியில் வழங்கப்படும் பல்வேறு நிதி திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினார்.
நரசநாயகபுரம் கிராம மக்கள் திரளாக பங்கேற்ற இந்த முகாமின் நிறைவில், வங்கி துணை மேலாளர் திருமதி கார்த்திகா நன்றியுரை ஆற்றினார்.
📌 செய்தியாளர்,
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
தஞ்சாவூர்.