Wed. Aug 20th, 2025



கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை – வாலிபர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக பூண்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27) மீது புகார் பதிவு செய்யப்பட்டது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், கொடைக்கானல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதியாகியதால், சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

📍 ரிப்போர்ட்டர்: ராமர், திருச்சிராப்பள்ளி மாவட்டம்



By TN NEWS