Wed. Aug 20th, 2025

விதிகளின் படி பதிவு செய்துள்ளதா என ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்காணிக்க வேண்டும் பதிவில்லாமல் ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்டறிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்துபவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஏழை கூலி தொழிலாளர்கள் ஏமாறாமல் இருக்க விதிமுறைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டுமென சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் வலியுறுத்தினார்.

ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி சீட்டு பண மோசடிகள் தொடர்பாக காவல்துறையில் குவியும் புகார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர். நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்.

திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலான இடங்களில் ஏழை எளிய கூலித் தொழிலாளர்களை குறிவைத்து  எவ்வித முறையான அனுமதியின்றி ஏல சீட்டு நடத்துபவர்களை தொடர்ச்சியாக கண்காணித்து அனுமதியின்றி ஏல சீட்டு நடத்துபவர்களை கண்டறிந்தது கடும் நடவடிக்கை எடுப்பதோடு இது தொட‌ர்பாக மக்களிடம் தொடர்ச்சியாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உரிய தீர்வுகாண வேண்டும்.

குறிப்பாக திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலான இடங்களில் அரசு துறையை சேர்ந்த அலுவலர்கள் ஊழியர்களும் இதேபோல் எவ்வித முறையான அனுமதியின்றி ஏல சீட்டு நடத்தி வருகின்றனர்.

ஏலச்சீட்டு நடத்த வேண்டுமானால் 1956-ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின்படி (பதிவு செய்யப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்), அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் நடத்த வேண்டும். ஆனால், இப்போது திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள பெரும்பாலான இடங்களில் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு ஏலச் சீட்டுகளின்  எண்ணிக்கை புற்றீசல்போல் பெருகிவருகிறது

எனவே திருப்பூரில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்துபவர்களை நம்பி பணத்தை பறிகொடுக்கும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெறுகின்றதும், பணத்தை பொது மக்கள் பறிகொடுப்பதும் தொடர் கதையாக உள்ளதால், பொதுமக்களிடம் இது தொட‌ர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் – சரவணக்குமார்

By TN NEWS