Wed. Aug 20th, 2025


2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதையடுத்து, சிலம்பம் தமிழ்நாடு சங்கம் விழுப்புரம் மாவட்ட செயலாளர், முன்னாள் தமிழ்நாடு மற்றும் பாரதியம் சிலம்பம் குழு மேலாளர் மற்றும் பயிற்றுநர் குமாரசாமி, செஞ்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கே.எஸ். மஸ்தான் அவர்களை நேரில் சந்தித்து, முதலமைச்சர் கோப்பை சிலம்பம் போட்டியில் மாற்றம் கோரி மனுவை வழங்கினார்.

அந்த மனுவில், தற்போது சிலம்பம் போட்டியில் மாணவர்கள் (6 முதல் 12ஆம் வகுப்பு) ஆண்கள் 45–55 கிலோ, பெண்கள் 40–50 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜ நிலவரப்படி 6–9 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலும் அந்த எடைக்கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பு குறைவாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால்,

எடைப்பிரிவு இல்லாமல் 6 முதல் 12ஆம் வகுப்பு அடிப்படையில் போட்டிகள் நடத்த வேண்டும் அல்லது

ஆண்களுக்கு 35–45 கிலோ, பெண்களுக்கு 30–40 கிலோ என மாற்றியமைத்து போட்டிகளை நடத்த வேண்டும்


எனவும், இதன் மூலம் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவர் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

📍 விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்



 

By TN NEWS