சுப்பையாபுரம் கிராம மக்களின் அவசர கோரிக்கை!
திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்குட்பட்ட அழகியபாண்டியாபுரம் ஊராட்சியின் சுப்பையாபுரம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குழாய் பதிக்கப்பட்டும், இதுவரை குடிநீர் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
மனு விவரம்:
செப்டம்பர் 2023-ல் மானூர் ஒன்றியத்தின் நான்கு கிராமங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் வீடு வீடாக குழாய் பதிக்கும் பணி துவங்கப்பட்டது.
அழகியபாண்டியாபுரம், செட்டிகுறிச்சி, சமத்துவபுரம் ஆகிய மூன்று கிராமங்களில் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், சுப்பையாபுரம் கிராமத்திற்கு மட்டும் இதுவரை தண்ணீர் வழங்கப்படவில்லை.
இந்த குறையை சுட்டிக்காட்டி, கிராமசபை கூட்டங்கள் மற்றும் பதிவு தபால் மூலமாக பல முறை மனுக்கள் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்களின் கோரிக்கை:
1. சுப்பையாபுரம் கிராமத்தில் இரண்டு ஆண்டுகளாக பதிக்கப்பட்டு கிடக்கும் குழாய் இணைப்புகள் மூலம் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும்.
2. திட்டப்பணிகள் முடிந்தும் தாமதப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆகியோரிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனு அனுப்பியவர்கள்:
சுப்பையாபுரம் கிராம மக்கள் சார்பாக வழக்கறிஞர் ஜெ. சந்திரசேகர், B.A., B.L., மதிமுக ஒன்றிய கழக செயலாளர் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பொதுமக்கள் கோரிக்கை மனு தமிழ்நாடு டுடே மீடியா குழுவின் மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
👉 கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த மனுவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக பரிசீலித்து, போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
இணை ஆசிரியர் சேக் முகைதீன்