Wed. Aug 20th, 2025

அரசின் அலட்சியம் பக்தரின் மரண ஓலம்..
விராலிமலை முருகன் கோயில்  ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோயில் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய பக்தர் பலி.

இந்து சமய அறநிலைத்துறை அலட்சியப் போக்குக்கு இந்து முன்னணி கடும் கண்டனம்..

இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோயிலை சுற்றியுள்ள இடங்களில் தனியார் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதை கண்டித்து ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தியும் ஆறுமுகம் என்கிற ஆரப்பன் என்ற சமூக ஆர்வலர் பல வருடமாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளார்.

இதை தமிழக அரசாங்கமும் இந்து சமய அறநிலைத்துறையும் முற்றிலும் கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  15-8-25 அன்று ஆறுமுகம், விராலிமலை முருகன் கோயில்  கோபுரத்தின் மேலே ஏறி தேசிய கொடியுடன் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளார்.

ஆக்கிரப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வராத காரணத்தால் விரக்தி அடைந்தவர், கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தன்னுயிரையும் தருவேன் என ஆறுமுகம் கூறினார்.

அவரை கீழே இறங்க காவல்துறையும், அரசு அதிகாரிகளும் பேசி பயனளிக்காதலால் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் இந்து முன்னணி பொறுப்பாளரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த கூறியுள்ளனர்.

இந்து முன்னணி பொறுப்பாளர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவர் கீழே இறங்க சம்மதித்திருக்கிறார்.

இந்நிலையில் கீழே இறங்கும் போது கால் தடுக்கி தவறி 70 அடி கோபுரத்திலிருந்து கீழே விழுந்ததில் பலியாகியுள்ளார்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகபாபு, கோயில் நிலங்களை மீட்டுள்ளதாக வெற்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்.

ஆனால் தமிழக அரசாங்கம் கட்டுப்பாட்டில் உள்ள 35 ஆயிரம் கோவில்களில் நான்கரை லட்சம் ஏக்கர் நிலங்களில் ஏறக்குறைய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும் இன்னும் அரசியல்வாதிகள், வேற்று மதத்தினர் ஆகியோர் ஆக்கிரமிப்பில் உள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சென்னையில் உள்ள  குயின்ஸ்லாந்து தீம் பார்க் அமைந்துள்ள 200 ஏக்கர் நிலம் காஞ்சிபுரம் மாவட்டம், பேரம்பாக்கம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பாத்தியப்பட்டதை நீதிமன்றம் மீட்க உத்தரவிட்டும் இதுவரை அரசாங்கமோ இந்து சமய அறநிலைத்துறையோ மீட்கவில்லை.  இந்நிலையில் அந்நிறுவனம் கோயில் நிலங்களை தன் பெயருக்கு மாற்ற முயற்சித்திருப்பதாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

விராலிமலை முருகன் கோயிலின் கோபுரத்தின் மீது ஏறி ஆக்கிரமிப்புகளை அகற்ற போராடிய ஆறுமுகத்தின் மரணத்திற்கு தமிழக அரசாங்கமும் இந்து சமய அறநிலையத்துறையின் மெத்தன போக்கே காரணம். இதற்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

சமூக ஆர்வலர் ஆறுமுகத்தின் மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்  தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

பத்திரிக்கையாளர்கள் முன் கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக பேட்டி கொடுக்கும் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் மீட்கப்பட்ட  கோயில் நிலங்களை இதுவரை ஆக்கிரமித்தவர்கள் யார்? அவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்? கோயில் ஆக்கிரமிப்பாளர்களிலிருந்து இதுவரை பெற்ற நஷ்ட ஈடு என்ன என்பதையும் ஒரு வெள்ளை அறிக்கை விட வேண்டும்.

மேலும் சமூக ஆர்வலர் ஆறுமுகம் அவர்களின் இறப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்த்துறை வழங்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்துகிறது…

தமிழ்நாடு டுடே செய்திகளுக்காக;

R.சுதாகர் – துணை ஆசிரியர்

Tamilnadu Today Media Networking.

 

By TN NEWS