Wed. Aug 20th, 2025



திண்டுக்கல் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி 2ஆம் வார்டு பகுதியில் உள்ள பொதுப் பாதை கடந்த ஒரு வாரமாக மிக மோசமான நிலையில் காணப்படுகிறது.

மழை காரணமாக சாலையில் களிமண் மற்றும் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்கள் பயன்படுத்தும் பாதை முழுவதும் சீர்குலைந்துள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், தினசரி வாகன ஓட்டிகள் என அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

பொதுமக்கள் பலமுறை ஊராட்சி அலுவலர்களிடம் சாலையை சீரமைக்க கோரிக்கை வைத்திருந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

“கடந்த ஒரு வாரமாகவே இந்த நிலை தொடர்கிறது. சாலையே இல்லாத மாதிரி மண் களிமண், தண்ணீர்… நடக்கவே முடியவில்லை. ஊராட்சி மன்றம் உடனடியாக சாலை பழுது பார்க்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலை தொடர்ந்தால் பள்ளி மாணவர்களும், முதியோரும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

📍 ராமர், திருச்சி மாவட்டம்

 

By TN NEWS